Load Image
dinamalar telegram
Advertisement

எஸ்.ஐ., எழுத்து தேர்வில் பேனா, அடையாளஅட்டை தவிர பிற பொருட்களுக்கு தடை

தேனி, -தேனி மாவட்டத்தில் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கான எழுத்துத்தேர்வு 5 மையங்களில் நாளை (ஜூன் 25) ல் 500 போலீசார் பாதுகாப்புடன் நடக்க உள்ளது.தேனி - மதுரை ரோடு மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலா ஒரு மையமும், கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லுாரி வளாகத்தில் 3 மையங்கள் என 5 தேர்வு மையங்களில் தேனி மாவட்டத்தில் விண்ணப்பித்த 4,522 தேர்வர்களுக்கு நேரடி எஸ்.ஐ.,க்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு காலை 10:00 முதல் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் 5:10 வரை நடக்க உள்ளது. பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்க்ரே தலைமையில் நடந்தது. ஏ.எஸ்.பி., கார்த்திக், டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ், பால்சுதர், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., கூறுகையில், தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வரும் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது. அடையாள அட்டை, நீலம், கருப்பு நிற பேனா மட்டுமே அனுமதி', என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • vadivelu - thenkaasi,இந்தியா

    தேர்வா, ஏலம் நடந்து முடிந்த பின் தேர்வு நடப்பதுதான் வழக்கம் ஆச்சே.

Advertisement