சொத்து வரி மறுசீரமைப்பில் மாற்று அதிகாரிகள் நியமிக்கலாமே
தேனி, -நகராட்சிகளில் சொத்துவரி, மனைவரி மறுசீரமைப்பு பணிகளில் வேறு மாவட்ட நகராட்சி அலுவலர்களை நியமித்து ஆய்வு செய்ய கோரியுள்ளனர்.
மாவட்டத்தில் தேனி நகராட்சியில் ரூ.6.95 கோடி, பெரியகுளம் ரூ.2.53 கோடி, போடி ரூ.2.77 கோடி, சின்னமனுார் ரூ.16 லட்சம், கம்பம் ரூ.3.25 கோடி, கூடலுார் ரூ.60 லட்சம் என ரூ.16.27 கோடி ஆண்டு வரி வருவாய் உள்ளது. தேனி நகராட்சியில் 29,381 வீட்டு வரி, 5,205 வணிக பயன்பாடு என 34, 586 வரி இனங்கள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 4.77 கோடி வரிவருவாய் கிடைக்கிறது. 2008 க்கு பின் தற்போது சொத்து வரியை அரசு உயர்த்தி உள்ளது.
இதனால் வரி மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. மாநகராட்சிகள், பெரிய நகராட்சிகளில் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் பயன்படுகிறது. பிற நகராட்சிகளில் வருவாய் அலுவலர்கள் நேரடியாக சென்று சொத்து அளவீடு செய்து வரி நிர்ணயம் செய்ய உள்ளனர். இதில் முறைகேட்டிற்கு வாய்ப்பு உள்ளது. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.. நகரின் முக்கிய பகுதிகள், மெயின் ரோடு, சந்தைப்பகுதிகளில் வரி அதிகமாகவும், தெருக்கள், பின்தங்கிய பகுதிகளில் வரி குறைவாக விதிக்கப்படும். இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையாக பிரித்து சதுர அடி அடிப்படையிலும் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதில் சில அலுவலர்கள் ஏ பிரிவில் உள்ள வணிக கட்டடங்களை சி, டி பிரிவு என்று குறைவாக வரிவிதிப்பதாகவும், கட்டட பரப்பளவை குறைத்து மதிப்பீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே வரி மறுசீரமைப்பு பணிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடனும் அல்லது வெளி மாவட்ட நகராட்சி அலுவலர்களை கொண்டு கணக்கீட்டால் முறைகேடு தவிர்த்து வருவாய் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!