Load Image
dinamalar telegram
Advertisement

ரூ.15 லட்சம் மதிப்பிலான அலைபேசிகள் ஒப்படைப்பு

தேனி,- -மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.தேனி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் காணாமல் போன 763 அலைபேசிகளை புகார்தாரர்களிடம் விபரம் பெற்று, தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குகள் பதிவு செய்து 714 அலைபேசிகள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்க்ரே அலைபேசிகளை ஒப்படைத்து பேசியதாவது: அலைபேசிகள் திருட்டை தடுக்க ஒரே வழி @பைன்டிங் டிவைஸ்' செயலியை அனைவரும் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொண்டால், பாதிக்கப்பட்டவர்களே எளிதாக அலைபேசி இருக்கும் இடத்தை இணையம் மூலம் பெற்றுவிடலாம். மேலும், அலைபேசியை திருடியவர்கள் @சிம்' மாற்றினாலும் அலைபேசி பயன்படுத்துபவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து விடலாம். இதனால் அலைபேசிகளில் பைண்டிங் டிவைஸ் செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.'' என்றார். ஏ.எஸ்.பி., கார்த்திக், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ., பாக்கியம் உடனிருந்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement