ரோடு அகலப்படுத்தும் பணிநெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
கூடலுார்,- கூடலுார் நகர் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் குமணன் ஆய்வு மேற்கொண்டார்.கூடலுார் நகர் பகுதியில் 4 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த மாதம் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் காலனி அருகே 2 இடங்களில் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அதேபோல் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ராஜாங்கம் சிலை அருகேயும், காய்கறி மார்க்கெட் அருகேயும் வெளியேறும் வகையில் ரோட்டின் குறுக்கே பாலம் அமைக்க ஹிந்து முன்னணி நகர செயலாளர் ஜெகன், நகர தலைவர் பாண்டித்துரை தலைமையில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் குமணன் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு பாலம் அமைப்பதற்காக தற்போது மதிப்பீடு செய்யவில்லை எனவும், விரைவில் மதிப்பீடு தயார் செய்து இப்பகுதியில் பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து ரோடு அகலப்படுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!