தேனி ஒன்றியத்தில் ரோடுகள் மோசம்: ஒன்றிய கூட்டத்தில் தலைவர் ஒப்புதல்
தேனி -''தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளில் உள்ள கிராமபுற ரோடுகள் சீரமைக்காததால் மோசமாக உள்ளன'', என ஒன்றிய கூட்டத்தில் தலைவர் சக்கரவர்த்தி தெரிவித்தார்.தேனி ஒன்றிய கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.,)தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், ஞானதிருப்பதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: தனலட்சுமி (தி.மு.க.) : சீலையம்பட்டி ஊராட்சியில் சிமென்ட் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.மாலா (தி.மு.க.) : கோட்டூர் இந்திரா காலனியில் சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் ரோட்டில் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.சங்கீதா (அ.தி.மு.க.,): ஸ்ரீரங்காபுரத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைத்து இரு ஆண்டுகள் ஆகியும் பயன்பாடின்றி உள்ளது. ஒராண்டாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை.தலைவர்: மத்திய அரசு நிதி வந்தவுடன், கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்திரா நகரில் சாக்கடை வசதி ஏற்படுத்தப்படும். தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளிலும் ரோடு மோசமாக உள்ளது. ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பு பணி செய்வதில்லை என்றார். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!