Load Image
dinamalar telegram
Advertisement

கலை பண்பாட்டு துறை ஓவிய பயிற்சி: 350 மாணவர்கள் பங்கேற்பு

தேனி -தேனியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி நடந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததால் மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து சிரமத்துடன் ஓவியம் வரைந்தனர்.அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஓவிய பயிற்சியில் 5 முதல் 16 வயது வரை உள்ள 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சி 8, 13, 16 வயது என மூன்று பிரிவாக நடந்தது. மதுரையை சேர்ந்த 4 ஓவியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார். பயிற்சி ஏற்பாட்டில் முறையான திட்டமிடல், இடவசதி இன்றி மாணவ, மாணவிகள் நெருக்கடியிலும் அமர்ந்து ஓவியம் வரைந்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement