அரசு மாதிரி பள்ளியில் பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகத்தால் மாணவர்கள் அவதி
தேனி -தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நான்கு சுகாதார வளாகங்களும் பராமரிப்பு இன்றி உள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. இதில் 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நபார்டு வங்கி நிதி உதவியில் தலா ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரு சுகாதார வளாகம் உட்பட நான்கு கழிப்பிடங்கள் உள்ளன. இதில் மூன்று பூட்டியே உள்ளன. திறந்துள்ள ஒரு சுகாதார வளாகமும், தண்ணணீர் வசதி, பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரமின்றி உள்ளது. மாணவர்கள் சிறுநீர் கழிக்க திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். வளாகத்தில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மாணவர்கள் கழிப்பிடம் செல்ல வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.இவ்வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வள மையம் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்களும் உள்ளன. அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் உள்ள மாதிரி பள்ளியிலேயே மாணவர்கள் அடிப்படை வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!