Load Image
dinamalar telegram
Advertisement

39 ஆயிரம் பேருக்கு இலவச கணினி பயிற்சி வழங்க இலக்கு

தேனி, -டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பால் வீட்டிற்கு ஒருவர் கணினி தொழில்நுட்ப அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2023 மார்ச் இறுதிக்குள் 39 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்', என, மாவட்ட பொது சேவை மையங்களின் மேலாளர் எம்.ஆனந்தராஜ் தெரிவித்தார். மாவட்டத்தில் 130 ஊராட்சிகள், நகர்புற பகுதிகளில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 236 பொது சேவை மையங்கள் இயங்குகின்றன. அதில் 76 மையங்கள் மாநில அரசின் இ-சேவை மையங்களுடன் இணைந்தும், 17 மையங்களில் ஆதார் பதிவுக்கான பயோமெட்ரிக் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள், சிறார்களுக்கான ஆதார் பதிவு பெற்றோர், காப்பாளர்கள் கைரேகை பதிவுடன் இலவசமாக பதிவு செய்யலாம். புதிய ஆதார் பதிவு இலவசம். ஆதாரில் பிழை திருத்தம் ரூ.50, கைரேகை பதிவு மாற்றத்திற்கு ரூ.100,கட்டணம், இ- -ஆதார் பதிவிறக்கம் செய்து கலர் பிரிண்ட் அவுட் பெற ரூ.30 கட்டணம். இதுதவிர பான் எண், விவசாய சேவைகள், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு, வருமான வரி தாக்கல், சமையல் காஸ் முன்பதிவு, உரம், பூச்சி மருந்துகள் விற்பனை உட்பட 230க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.மையங்களின் செயல்பாடுகள் குறித்து தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அவர் பேசியதாவது: பொது சேவை மையங்கள் துவங்க என்ன செய்ய வேண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடிந்திருந்தால் போதும். சேவை மைய அடையாள எண் பெற்ற பின், தேர்வு செய்வதற்காக ஆன்-லைன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அத்துடன் புதிய கணினி, மக்கள் வந்து செல்ல காற்றோற்றமான இடம், பயோ மெட்ரிக் பதிவுக்கான உபகரணங்கள் வேண்டும். மையத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப்படும். என்னென்ன சேவைகள் பொது சேவை மையம் என்றால் ஆதார் பதிவுதான் என சிலர் தவறாக புரிந்துள்ளனர். இங்கு இன்சூரன்ஸ், உடல்நல காப்பீடுகள், டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சிகள், கல்வி கடன் பெற விண்ணப்பித்தல், சேவை மையத்தில் காஸ் பதிவு உள்பட 200க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.கணினி பயிற்சிகள் குறித்துவீட்டிற்கு ஒருவர் கணினி தொழில்நுட்ப அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் 2023 மார்ச் இறுதிக்குள் மாவட்டத்தில் 39 ஆயிரம் பேருக்கு கணினி பயிற்சி அளிக்க உள்ளோம். குறிப்பாக கிராமப்புற மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், கணினி பயன்பாடுகள், டிஜிட்டல் சாதனங்களின் அறிமுகம், அவற்றை இயக்கி விளக்குதல், இண்டர்நெட் அறிமுகம், இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் திறன்களை அதிகரித்தல் குறித்து சுழற்சி முறையில் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படும். 130 ஊராட்சிகளில் ஒரு ஊராட்சிக்கு 300 பேர் வீதம் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாகும்.உரம், பூச்சி மருந்துகள் பெறலாமா கிராமப்புற பொது சேவை மையங்களில் விவசாயிகள் உரம், பூச்சி மருந்துகள் பதிவு செய்தால், டோர் டெலிவரி செய்யும் வசதி உண்டு. இதனால் விவசாயிகள் நீண்ட துாரம் செல்லும் சிரமம் குறையும்.மாணவர்களுக்கான பயிற்சிகள் பற்றி மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திறனறி தேர்வு நடத்தபடுகிறது. அவரவர் படிக்கும் பாடங்களுக்கு ஏற்ப இந்தத் தேர்வு அமையும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும். செப் 5ல் தேர்வும், அதற்கு முன் இரு மாதிரி தேர்வுகளும், ஜனவரி 7 ல் முடிவுகள் வெளியாகும். பாடவாரியாக முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். முதியோர் உதவி தொகை பெற வாழ்நாள் சான்றிதழ்' அவசியமா மூத்த குடிமக்கள் தங்கள் கைரேகை பதிவு செய்வதன் மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணமாக வழங்கப்படும். வாழ்நாள் சான்றிதழ் வழங்குகிறோம். இதுகுறித்து வாரிசுதாரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம். இதில் 20 வயது முதல் 40 வயது வரை முடிந்தளவு பீரிமியம் செலுத்தினால் 60 வயதிற்கு மேல் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக பெறலாம். மேலும் விபரங்களுக்கு 70108 62936 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement