லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
சின்னமனுார்,- -சின்னமனுார் லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். பழமையும், பிரசித்திபெற்ற இக் கோயிலில் பெருமாள் நின்ற கோலத்திலும், அவரது காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோயிலில் இருந்து தான் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே தான் செப்பேடுகள் கண்ட சின்னமனுார் என்ற பெயர் வந்தது. இச் சிறப்பு பெற்ற கோயிலில் 2005 க்கு பின் திருப்பணி நடக்கவில்லை. திருப்பணி, கும்பாபிஷேகம் குறித்து அறநிலையத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. எனவே லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி, கும்பாபிேஷகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!