உருக்குலைந்த ரோடு; பயணித்தாலே அதிர்வு: சிரமத்தில் தென்னம்பட்டி கிராம மக்கள்
வடமதுரை--தென்னம்பட்டி அருகே உருக்குலைந்த 2.5 கி.மீ., துார ரோட்டினால் தென்னம்பட்டி சுற்று கிராம மக்கள் தினமும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில் அருகில் பிரியும் கிராம ரோடு 2.50 கி.மீ., துாரத்தில் அய்யலுார் எரியோடு ரோட்டில் இணைகிறது. பாகாநத்தம், கோவிலாத்துபட்டி, மலைப்பட்டி, பா.புதுார், தோப்பூர், களத்துார், சத்யா நகர், முல்லாம்பட்டி, கே.குரும்பபட்டி, சவடகவுண்டன்பட்டி, தூங்கனம்பட்டி, செங்காடு, பாறைக்களம், குண்டாம்பட்டி, சின்னகுட்டியபட்டி என பல கிராம மக்கள் வடமதுரை, தென்னம்பட்டி பகுதிக்கு வந்து செல்ல இந்த ரோடு பயன்படுகிறது. தற்போது இந்த ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் பாதசாரிகள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சிரமம் படுகின்றனர்.
-ரோடு புதுப்பித்து 5 ஆண்டாச்சு
கே.அழகுமலை, மில்தொழிலாளி, கே.குரும்பபட்டி: திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல் குவாரிக்கு அதிகளவில் டிப்பர் லாரிகள் வந்து சென்றதால் ரோடு உருக்குலைந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ரோடு புதுப்பிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. ரோடு புதுப்பித்து 5 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் புதுப்பிக்காமல் உள்ளனர். கடும் அதிர்வுகளை தரும் ரோடாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
-பாடா
ய்படுத்
துகிறது
கே.விநாயகமூர்த்தி, டிரைவர், பாகாநத்தம்: பாகாநத்தம் ஊராட்சி, எரியோடு பேரூராட்சியின் சில கிராமங்களை சார்ந்த மக்கள் வடமதுரை செல்ல இவ்வழியே பயன்படுகிறது. தென்னம்பட்டி மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அதிகளவில் செல்கின்றனர். அரசு பஸ், மில் வேன்களும் அதிகளவில் இவ்வழியே பயணிக்கின்றன. ஆனால் இங்கு மொத்த துார ரோடும் சேதமடைந்து மக்களை பாடாய்படுத்துகிறது.
பயணித்தாலே உடல் வலி
பி.முருகன், சமூக ஆர்வலர், கெச்சானிபட்டி: பணி நிமித்தமாக இப்பகுதிக்கு டூவீலரில் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்குள்ள ரோடு போக்குவரத்திற்கு பயனற்று இருப்பதால் பலரும் கீழே விழுகின்றனர். கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலரும் இவ்வழியே பயணிக்கும் போது அதிக அவதியை அனுபவிக்கின்றனர். 2.50 கி.மீ., துாரத்தை கடப்போருக்கு மிகுந்த உடல் வலி ஏற்படுகிறது.-பி.ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர், தென்னம்பட்டி: இரண்டரை ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர் மூலமான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ரோட்டினால் மக்கள் படும் அவதி குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்து ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி வருகிறேன். பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!