Load Image
dinamalar telegram
Advertisement

எஸ்.ஐ., பதவிக்கு எழுத்து தேர்வு

விருதுநகர்---தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படையில் காலியாக உள்ள 444 எஸ்.ஐ., பதவிக்கு விண்ணப்பித்த 7925 நபர்களுக்கான எழுத்து தேர்வு நாளை காலை 10:00 மணிக்கு துவங்கி 12:30 வரை நடக்கிறது.அதை தொடர்ந்து பொது, போலீஸ் துறையில் பணிபுரியும் 8494 விண்ணப்பதாரர்களுக்கான தமிழ் மொழி தகுதி தேர்வு நாளை மதியம் 3:30 மணிக்கு துவங்கி 5:10 மணி வரை நடக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவித்யா கல்லுாரி, வி.எஸ்.வி.என். கல்லுாரியிலும், சிவகாசி அரசு கலை கல்லுாரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி, பந்தல்குடி சவுடாம்பிகா கல்லுாரி, ஆவியூர் சேது கல்லுாரி, வெம்பக்கோட்டை பிஎஸ்ஆர் கல்லுாரி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லுாரியில் நடக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் 674 விண்ணப்பதாரர்களுக்கு 26ம் தேதி காலை 10:00 முதல் 1:00 மணி் வரை வி.எஸ்.வி.என். கல்லுாரியில் தேர்வு நடக்கிறது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement