Load Image
dinamalar telegram
Advertisement

43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த படி அக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உள்ளனர்.
நேற்று காலை மாணவ - மாணவியருக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அனைவரும் மாத்திரை சாப்பிட்ட நிலையில் மதியம் 1:00 மணியளவில் பள்ளியில் வழங்கப்பட்ட முட்டையுடன் கூடிய மதிய உணவை சாப்பிட்டனர்.அப்போது திடீரென 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement