Load Image
dinamalar telegram
Advertisement

டாப்பர்ஸ் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு

சென்னை,-அரசின் சார்பில், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 'டாப்பர்ஸ்' மாணவர்களுக்கு, உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Tamil News

தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, தொழிற்கல்வி, இளநிலை பட்டப் படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட, அனைத்து வகை உயர் கல்வியிலும், 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும், தமிழக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.ஏதாவது ஒரு வகுப்பில் விடுபட்டிருந்தாலும், இட ஒதுக்கீடு கிடைக்காது.


இந்த கட்டுப்பாடுகளில், ஒரு தரப்பு மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியாக தேர்வு செய்யப்பட்டு, சில முன்னணி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 படித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர கட்டணங்களை, பள்ளிக்கல்வி துறையே நேரடியாக பள்ளிகளுக்கு செலுத்துகிறது.

Latest Tamil News
இந்த மாணவர்களுக்கும், உயர்கல்வி படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் 'ஆன்லைன்' விண்ணப்பத்தில், தனியார் பள்ளிகளில் அரசின் கல்வி உரிமை சட்டத்தில் படித்தவரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 'டாப்பர்ஸ்' மாணவர்கள், இன்ஜினியரிங் விண்ணப்பத்தில், தங்கள் விபரத்தை வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (7)

  • ஆரூர் ரங் -

    இத்தனைக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு லட்சத்தில் சம்பளம். 5 மணிநேர வேலை. அதுவும் ஆண்டுக்கு 150 நாட்கள்😛 மட்டுமே வேலை.

  • ponssasi - chennai,இந்தியா

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியாக தேர்வு செய்யப்பட்டு, சில முன்னணி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 படித்துள்ளனர். அப்படியானால் அரசே அரசு பள்ளி ஆசிரியர்களின் லச்சனம் அவளவுதான் என முடிவு செய்துவிட்டதா? ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களையும் அரசு தனியார் பள்ளிகளில் சேர்த்து அதற்குண்டான கட்டணத்தையும் செலுத்தாவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. அரசுக்கும் பல கோடிகள் செலவு மிச்சமாகும், ஆசிரியர்களுக்கு ஊதியம் தரவேண்டாம், ஊதிய உயர்வு கேட்டு போராடமாட்டார்கள்

  • Ram - ottawa,கனடா

    அப்போ அரசு பள்ளி வேலைக்காகாது பள்ளி என்று அரசே முடிவெடுத்து விட்டது....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ரிசர்வேசன் இல்லாத இடங்கள் அனேகமாக இனி இருக்காது. ஏதாவது ஒரு வகையில் ஜாதியைச்சொல்லி இடம் மறுக்கப்படும் - இதுதான் திராவிட மாடல் ஜாதி ஒழிப்பு...

    • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

      இந்தியாவில் முதலில் அரிய வகை ஏழைகள் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும்

  • Girija - Chennai,இந்தியா

    எம் ஏ எம் பார்முலா விஞ்ஞான ஊழலுக்கு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்