Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கு கேம்பஸ் பவர்ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம்

சென்னை:உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்காக, 'கேம்பஸ் பவர்' என்ற தளத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 'கேம்பஸ் பவர்' என்ற தளத்தை, புதிதாக அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிறுவனங்களின் தேவைகளை, ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில், இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கி மற்றும் மதிப்புக் கூட்டு சேவைகளை ஒரே இடத்தில் வங்கி வழங்குகிறது. பல்வேறு தரப்பினரையும் மாணவர்கள் தொடர்பு கொள்ள இந்த தளம் உதவும்.வெளிநாட்டு கணக்குகள், வங்கிக் கடன்கள் மற்றும் அது குறித்த வரிச் சலுகைகள், அன்னிய செலாவணி தீர்வுகள், பணம் செலுத்துவதற்கான தீர்வுகள் உட்பட, அவரவர் தேவைக்கு ஏற்ப, அதற்கேற்ற நிதி தயாரிப்புகளை இந்த தளம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.இதர வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட, அனைவரும் இந்த தளத்தை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement