குறிஞ்சிப்பாடி பைனான்சியர்புதுச்சேரியில் அடித்து கொலை
பாகூர்:புதுச்சேரி அருகே, கரும்பு தோட்டத்தில், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பைனான்சியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல், 65. இவரது மகன் செந்தில்குமார், 39. இருவரும், வட்டிக்கு பணம் கொடுக்கும் 'பைனான்ஸ்' தொழில் செய்கின்றனர்.செந்தில்குமாருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவி, மகள், மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், செந்தில்குமார் தன் குடும்பத்தினருடன், கடலுார், கம்பியம்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.மனைவி ஜெயலட்சுமி, அவருக்கு போன் செய்தபோது, 'ஸ்விட்ச் ஆப்' ஆகி இருந்தது. இதனால், ஜெயலட்சுமி தன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் இரவு முழுதும் சோரியாங்குப்பம் பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை சாலையோரமாக இருந்த கரும்பு தோட்டத்தில் உள்ள வாய்க்காலில், தலையில் ரத்த காயங்களுடன் செந்தில்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், செந்தில்குமார் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!