எஸ்.ஐ., மண்டை உடைப்பு போதை போலீஸ்காரர் கைது
பூவந்தி:பணியில் இருந்த எஸ்.ஐ.,யை, கல்லால் அடித்து காயப்படுத்திய, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூவந்தியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 32; இளையான்குடி ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார். பூவந்தி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பரமசிவம், 49.நேற்று முன்தினம் இரவு, முத்துப்பாண்டி குடிபோதையில், கடைத்தெருவில் தகராறு செய்தார். அவரை எஸ்.ஐ., பரமசிவம் கண்டித்து அனுப்பினார்.
ஆத்திரத்தில் இருந்த முத்துப்பாண்டி நள்ளிரவு, 12:00 மணிக்கு, செக்போஸ்ட் பணியில் இருந்த பரமசிவத்தை கல்லால் அடித்தார்.இதில், அவர் மண்டை உடைந்து, மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூவந்தி போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
இதற்கு முன், உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக முத்துப்பாண்டி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதற்கு பின் பணியில் சேர்ந்தும், இளையான்குடி ஸ்டேஷனுக்கு செல்லாததால் 'ஆப்சென்டில்' வைத்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!