Load Image
dinamalar telegram
Advertisement

சமூக நீதி என்பது வெறும் வேஷம்; தி.மு.க., மீது அண்ணாமலை காட்டம்

சென்னை,-'ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம் நிஜமான வேஷம்' என, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Latest Tamil News

அவரது அறிக்கை:இந்திய வரலாற்றில்முதன்முறையாக, ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை, பா.ஜ., ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட தகுதியுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய இயலாமல், நேற்று வரை பா.ஜ.,வில் இருந்த யஷ்வந்த் சின்ஹாவை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவல நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று இதுவரை பேசிய, தி.மு.க., திருமாவளவன், காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்க போகின்றனர்?


இந்தியாவில், 10 கோடி பேருக்கும் மேல் பழங்குடி இனத்தவர் இருந்த போதிலும், அவர்களில் ஒருவர் கூட இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை. ஒரு பழங்குடியின வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்ப்பவர்களாக, சமூக நீதியின் காப்பாளர்கள் இருப்பர்.தி.மு.க.,வும், காங்கிரசும் சமூகத்தில் அடித்தட்டில் இருந்து மேலே வந்தால் கூட, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தரும். மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழி வழியாக 'போஸ்டர்' ஒட்டுவதற்கும், 'அடுத்த தலைவர் வாழ்க' என கோஷம் போடவும், அடிமட்ட வேலை செய்ய மட்டுமே அனுமதி தரப்படும்.'கிறிஸ்துவரை முன்னிறுத்தினால் தான் ஆதரிப்பேன்' என்ற திருமாவளவனின் நிலை மாறி விட்டதா?


இதன் வாயிலாக, தமிழகத்தில் இருப்பது சமூக நீதியா; சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.தி.மு.க., எப்போதுமே தமிழுக்கும், தாழ்நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்படும். 'தமிழ், தமிழ்' என்பது பேச்சளவில்நின்று விடும். சிறுபான்மை இனத்தவரான, தமிழரான அப்துல் கலாமுக்கு ஓட்டு போடாமல் லஷ்மி சேஹலுக்கு ஓட்டு போட்ட கட்சி.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்றெல்லாம், தி.மு.க., திருமாவளவன், காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம், நிஜமான வேஷம்.

Latest Tamil News
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்மணியை, இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்த முன்வந்த பிரதமர் மோடியையும், பா.ஜ.,வின் அனைத்து தலைவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக, மகளிருக்கு மாண்பு சேர்த்த மனிதருள் மாணிக்கமாக பிரதமர் மோடி குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளி வீசுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (26)

 • மதுமிதா -

  நீதி கோர்ட்டுக்கு சொந்தம் சமூகம் Social subject கல்விக்கு சம்மந்தம் இரண்டுமே மாடல் அரசுக்கு புரியாது புரிஞ்ச மாதிரி பேசுவாங்க ஜி

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ........ திமுகவில் ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாரும் தலைமைக்கு வரமுடியாது ........ ஒரு படித்த பழங்குடியின இளைஞரை திமுக தலைவராக ஸ்டாலின் நியமிப்பார் ...... சமூக நீதியை நிலை நாட்டுவார் ........

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஒ,,,,

 • Sandru - Chennai,இந்தியா

  ,,,,

 • ஆரூர் ரங் -

  இதுவரை கிருபாநிதி, முருகன் எனும் இரு பட்டியலினதார் தமிழக பிஜெபி தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். (மற்ற பலர் OBC மற்றும் மொழி சிறுபான்மையினர்). . இது திமுக வில் இன்பா காலத்துக்குப் பிறகாவது சாத்தியமா? ம்ஹூம். எனக்கு😉 நம்பிக்கையில்லை.( ஆஃப்டர் ஆல் SC.. நீங்களெல்லாம் பொதுத்தொகுதி கேட்கலாமா? 🤭 கட்டுமரநிதியின் இழிவு வசனம்)

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்