இளம்பெண் போட்டோவை முகநூலில் வெளியிட்டவர் கைது
தஞ்சாவூர்:இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை, முகநுால் பக்கத்தில் வெளியிட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த, 28 வயது இளம் பெண் ஒருவருக்கும், திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, கணவனை பிரிந்து வாழ்ந்த அந்த இளம்பெண்ணுக்கும், திருச்சி, காட்டூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். சில மாதங்களில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், அருண்குமாரை பிரிந்த இளம்பெண், தஞ்சாவூரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.ஆத்திரமடைந்த அருண்குமார், அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை, சமூக வலைதளமான முகநுாலில் வெளியிட்டார்.இது குறித்து, அந்த இளம்பெண் அளித்த புகார்படி, தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!