Load Image
dinamalar telegram
Advertisement

கருவாழக்கரை காமாட்சி அம்மன்கோவில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை:கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை கிராமத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த சக்தி பீடமான காமாட்சியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமஹா சன்னிதானம், கூனம்பட்டி ஆதீனம், வேலுார் வனதுர்கா பீடம் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.தொழிலதிபர்கள் சென்னை டெக்கான் மூர்த்தி, மயிலாடுதுறை விஜயகுமார், தமிழக அரசின் முதன்மை செயலர் ஜவஹர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement