Load Image
dinamalar telegram
Advertisement

பாடகி சுதா ரகுநாதனுக்கு நியூயார்க் மேயர் கவுரவம்

சென்னை:அமெரிக்காவின் நியூயார்க்கில் ஜூன் 19 தேதி 'சுதா ரகுநாதன் தினம்' அறிவிக்கப்பட்டது.இதற்கான பிரகடனத்தை நியூயார்க் மேயர் எரிக் ஆடம் வெளியிட்டார்.
தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன். இவரது இசை அறிவு சமூக சேவை உள்ளிட்டவற்றை பாராட்டி நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார்.நியூயார்க் மேயர் எரிக் ஆடம் கூறியதாவது:இனிய குரல் வளத்தால் ரசிகர்களை மகிழ்வித்த சுதா ரகுநாதன் கடல் கடந்து பல சாதனைகளை படைத்துஉள்ளார்.

இவர் நடத்தும் அறக்கட்டளை வாயிலாக பலருக்கு நன்மை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய - அமெரிக்கர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதா ரகுநாதனின் திறமை சேவையை பாராட்டி நியூயார்க்கில் 2022ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி 'சுதா ரகுநாதன் தினமாக' அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கான பிரகடன ஆவணத்தை பாடகி சுதா ரகுநாதனிடம் நியூயார்க் மேயர் அலுவலக வர்த்தகம் முதலீடு மற்றும் புதுமை துறைக்கான துணை கமிஷனர் திலீப் சவுகஹான் வழங்கினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement