Load Image
dinamalar telegram
Advertisement

அடங்க மாட்றாங்கய்யா!ரூ.5,000 லஞ்சம்அரசு எழுத்தர் கைது

திண்டிவனம்:இலவச வீட்டு மனை பட்டா ஆவணங்கள் வழங்க, விவசாயி ஒருவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, திண்டிவனம் தாலுகா பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆசூரைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது பெயரிலான இலவச வீட்டு மனை பட்டாவை, மகன் யுவராஜ் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பதிவறை எழுத்தர் சிவஞானவேல், 48, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சிவஞானவேலுவிடம் யுவராஜ் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement