Load Image
dinamalar telegram
Advertisement

கம்யூ., - எம்.பி., தலைமையில் அத்துமீறல் :ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை: போலீஸ் மீது தாக்குதல்

மதுரை:மதுரையில் நடந்த ரயில் நிலைய முற்றுகையை தடுத்த போலீஸ்காரர் கன்னத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் அறைந்தார்.
ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்ற கட்சியினரை தடுத்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருடன், கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.ராணுவத்தின், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், அக்கட்சி எம்.பி., வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியலுக்கு வந்தனர்.
மெயின் ரோட்டிலேயே அவர்களை போலீசார் தடுத்தனர்.வெங்கடேசனும், துணைமேயர் நாகராஜனும், முதல் ஆளாக நின்றிருந்ததால் அவர்களை பின்னோக்கி தள்ள போலீசார் தயங்கினர்.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கட்சியினர், போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு, ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்றனர்.அவர்களை தடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிராஜ் கன்னத்தில், மாவட்ட செயலர் ராஜேந்திரன் அறைந்தார்.
போலீசார் கண்டுகொள்ளவில்லை.இதுவே சாதாரண பொதுமக்களாக இருந்தால், போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்திருக்கும். ஆனால், கம்யூ., கட்சியினர் என்பதாலும், தி.மு.க., கூட்டணியில் இருப்பதாலும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாலும், போலீசார் மென்மையான போக்கையே கையாண்டனர்.போலீஸ் தடையை மீறி ஸ்டேஷன் பிரதான வாசலில் கட்சியினர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் திடீரென கட்சி கொடியுடன், மறியலில் ஈடுபட ரயில்களை நோக்கி ஓடினர்.
அவர்களை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தடுக்க, அவருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கட்சி கொடியை பறித்துச்சென்ற கமிஷனரை, விரட்டிச்சென்று பறிக்க முயன்றனர்.மக்களுக்காக போராடுவதாக கூறும் கம்யூ., கட்சியினரின் இந்த போராட்டத்தால், நேற்று ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்த பயணியர், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். மறியலுக்கு முயன்றதாக, 50 பெண்கள் உட்பட, 350 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

Advertisement