ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள் அக்னி பாதையை தேர்வு செய்வர்: வானதி சீனிவாசன்

அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில்பணியாற்ற வாய்ப்பளிக்கும், 'அக்னிபத்' என்ற புரட்சிகர திட்டத்தை, ஜூன் 14-ல் மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்னிபத் என்றால் நெருப்பு பாதை.ராணுவத்தில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். அதில், ஒன்று தான் குறுகிய கால ராணுவப் பணி. இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், வழக்கம்போல எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன; திட்டமிட்டு பல வதந்திகள் பரப்பப்பட்டன.
அதனால், சில மாநிலங்களில் போராட்டம் என்ற பெயரில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.ராணுவத்தில் சேரும் எண்ணம் கொண்டவர்கள், தேசத்தின் மீது தீராக் காதல் கொண்டவர்களாகவே இருப்பர். ஒருபோதும் தேசத்தின் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.அக்னி வீரர்களில் 25 சதவீதத்தினர், நிரந்தர ராணுவப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவர்.

மீதமுள்ளவர்களில், துணை ராணுவப் படை, தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பணிக்கு சேர முடியும். அக்னி வீரர்களை பணியில் அமர்த்த, அரசுத் துறைகளும், தனியார் துறைகளும் போட்டி போடும். எனவே, 'நான்கு ஆண்டுகள் பணிக்குப் பின் வீரர்கள், வேறு வேலை கிடைக்காமல் அவதிப்படுவர்; தவறான பாதைக்கு செல்வர்; நக்சல் இயக்கங்களில் சேருவர்' என்ற, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள், அக்னி பாதையைத்தான் தேர்வு செய்வர்.இவ்வாறு வானதி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
எல்லோருக்கும் பட்டக் கல்வி கொடுத்து என்ன பயன்? படிப்பு அதிகம் ஏறாமல்😗 குடும்பத்தைக் காப்பாற்ற அக்னியில் சேர்ந்தால் என்ன தவறு? திராவிஷ மாடலில் MTech படித்தவர்கள் கால்நடை ஆஸ்பத்திரியில் உதவியாளர்( ஆடுமாடு கட்டிவைத்து தீனி போடும் வேலை ) பதவிக்கு கியூ வில் நிற்கிறார்கள். அதற்கு இடஒதுக்கீடு, கவுன்சலிங், இலட்சக்கணக்கில் ஸ்காலர்ஷிப் கொடுத்து M TECH எதற்கு? அவ்வளவுதரம் மிக்ககல்வி? . தேசத்தின் சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அக்னி வீரர்கள் ஆகட்டும். யாருமே கட்டாயப்படுத்தவில்லையே. 200 உ.பி ஸ் பற்றாக்குறை ஏற்படும் என்ற பயத்தில் அக்னி பத் திட்டத்தை எதிர்ப்பது🙃 தெளிவு.
படிப்பில் விருப்பில்லா இளைஞர்கள் அக்னி பாதையில் பயணிக்கலாம்.
ராணுவ ஆசையில் துணிதுவைப்பார்கள்
இந்தியாவுல ஏமாத்துறவங்க, ஏமாறுரவங்க சரிசம விகிதத்தில் இருக்காங்க.
,,,,