பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு நீடூர் சாதிக் பாஷா கூட்டாளிகளுக்கு வலை
சென்னை:பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை நீடூர் சாதிக் பாஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா 38. இவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.இதையடுத்து பிப். 21 காலை 10:00 மணியளவில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கறுப்பு நிற காரில் மின்னல் வேகத்தில் சென்ற சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகளை போலீசார் மடக்கினர்.
போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகளான கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக் 29, காரைக்கால் இர்பான் 22, சென்னை அயனாவரம் ரஹ்மத் 39, மயிலாடுதுறை ஜபார் அலி 58 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியவந்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகள் காலிபா பார்ட்டி ஆப் இண்டியா காலிபா பிரன்ட் ஆப் இண்டியா என்ற அமைப்புகளை நடத்தி வந்தது தெரியவந்தது.இந்த அமைப்பின் வாயிலாக ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்ததையும் கண்டுபிடித்தனர். அதன்பின் ஐந்து பேரின் வீடுகளில் பல மணி நேரம் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆவணங்கள் தற்காப்பு பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயங்கரவாதத்தை துாண்டும் வாசகங்கள் அடங்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் இவர்களை ஜூன் 18ல் இருந்து ஐந்து நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை திரட்டி வந்ததை வாக்குமூலமாக அளித்தனர்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல அலுவலகம் துவங்கி ரகசிய கூட்டங்கள் நடத்தி வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.விரைவில் இவர்களின் வீடுகளில் சோதனை செய்யப்படும். பயங்கராத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தால் கைது செய்யப்படுவர் என என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!