Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்குவாந்தி, மயக்கம்

செங்கம்:சத்துணவு சாப்பிட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த படி அக்ரஹாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உள்ளனர். நேற்று காலை, மாணவ - மாணவியருக்கு, இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது.
அனைவரும் மாத்திரை சாப்பிட்ட நிலையில் மதியம், 1:00 மணியளவில், பள்ளியில் வழங்கப்பட்ட முட்டையுடன் கூடிய மதிய உணவை சாப்பிட்டனர். அப்போது, திடீரென, 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement