Load Image
dinamalar telegram
Advertisement

மாவட்ட பதிவாளர்கள் 5 பேர் மாற்றம்

சென்னை:பதிவுத் துறையில் ஐந்து மாவட்ட பதிவாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை சிங்காநல்லுாரில் சார் பதிவாளர் பணியில் இருந்த மாவட்ட பதிவாளர் குமார் கரூர் நிர்வாக பணிக்கான மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சையில் தணிக்கை மாவட்ட பதிவாளராக இருந்த சுமதி மத்திய சென்னை பதிவு மாவட்டத்தில் சீட்டு நடுவராக மாற்றப்பட்டுள்ளார்.புதுக்கோட்டையில் தணிக்கை மாவட்ட பதிவாளராக இருந்த குணசேகரன் விருதுநகரில் தணிக்கை மாவட்ட பதிவாளாராகவும் அந்த இடத்தில் இருந்த அஞ்சன குமார் புதுக்கோட்டை தணிக்கை மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.கோவையில் புலனாய்வு பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்த அமீர் ராஜா மதுரையில் அரசரடியில் சார் பதிவாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement