மாணவர் மீது மோதிய போலீஸ் ஜீப்
திருவெண்ணெய்நல்லுார்:பள்ளி மாணவர் மீது போலீஸ் ஜீப் மோதி கவிழ்ந்ததில், மாணவர், ஏ.எஸ்.பி., உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர்குப்பத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து மகன் லோகேஷ், 13; மணக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.நேற்று மாலை, 4:45 மணிக்கு பள்ளி முடிந்து, வீட்டிற்கு செல்ல கடலுார் - சித்துார் சாலையை லோகேஷ் கடக்க முயன்றார்.
அப்போது, கடலுாரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாக சென்ற போலீஸ் ஜீப், பள்ளி மாணவர் மீது மோதாமல் இருக்க, டிரைவர் திடீரென 'பிரேக்' போட்டார்.இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மாணவர் மீது மோதியபடி சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. பள்ளி மாணவர் லோகேஷின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காரில் பயணம் செய்த கடலுார் மாவட்ட ஏ.எஸ்.பி., ரகுபதி, 32, அவரது மனைவி மரியபிரியா, தந்தை பாலு, தாய் காசியம்மாள் மற்றும் போலீஸ் டிரைவர் தமிழ்குமரன் படுகாயம் அடைந்தனர். திருவெண்ணெய்நல்லுார் போலீசார், அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!