Load Image
dinamalar telegram
Advertisement

மாஜி எஸ்.ஐ., மீது இளம்பெண் புகார்

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், இரண்டு வாரங்களுக்கு முன், காதலருடன் விருத்தாசலத்தில் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.\
அப்போது, அப்பெண்ணிடம், அங்கு செக்யூரிட்டியாக பணிபுரியும் 60 வயது நபர், 'உன் பெற்றோரை எனக்கு நன்றாக தெரியும்' எனக்கூறி, அவரது மொபைல் போன் எண்ணை வாங்கி உள்ளார்.அடுத்த நாள் இரவு, இளம்பெண்ணின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி உள்ளார்.
மேலும், 'என்னுடன் பேச வேண்டும். இல்லை என்றால், பெற்றோரிடம் காதலனுடன் சினிமாவிற்கு வந்ததை கூறி விடுவேன்' என, மிரட்டி உள்ளார்.இதையடுத்து, அவரை பற்றி அந்த பெண் விசாரித்ததில், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது செக்யூரிட்டியாக பணிபுரிவது தெரிந்தது.அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement