பஸ்சை கடத்திய புகார்: தி.மு.க., - எம்.பி., மகன் கைது
திருச்சி:திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்ற தனியார் பஸ்சை கடத்தியதாக தி.மு.க. - எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ. - ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலருமான சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.அவரை விடுவிக்க கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ஜ.வினரும் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் மே மாதம் பா.ஜ.வில் இணைந்தார். சமீபத்தில் அவருக்கு கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டது.திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சை கைப்பற்றியதாக அவர் மீது கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
சூர்யா கூறியதாவது: ஜூன் 11ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே பை - பாஸ் சாலையில் வேகமாக வந்த தனியார் பஸ் என் கார் உட்பட மூன்று வாகனங்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் தனியார் பஸ் உரிமையாளர் கார் சேதத்தை சீரமைக்கும் செலவை தருவதாக ஒப்புக்கொண்டார்.
பேசியபடி பணம் தராமல் இழுத்தடித்ததால் நான்கு நாட்களுக்குமுன் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் சம்மதத்துடன் திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் அந்த பஸ்சை சிறைபிடித்தோம்.தற்போது அமைச்சர் பொன்முடி தலையீட்டில் விதிமுறைகளை மீறி நேற்று நள்ளிரவு என் மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.இவ்வாறு தெரிவித்தார்.
சூர்யா கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தியும் கலையாமல் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏழு பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.

4 பிரிவுகளில் வழக்கு
பா.ஜ.கட்சியின் ஒ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யாவை கண்டோன்மெண்ட் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர்
மீது பஸ் ஸ்டாண்டில் நின்ற தனியார் ஆம்னி பஸ்சை கடத்தியது பஸ் உரிமையாளரை
மிரட்டியது உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து நேற்று இரவு
நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!