மனைவி கொலை:கணவனுக்கு ஆயுள்
பெரம்பலுார்:மனைவியை கொலை செய்த கணவனுக்கு, பெரம்பலுார் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 63. அவரது மனைவி அஞ்சலை, 59. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நடராஜ், 2018ல் அஞ்சலையை வெட்டிக் கொலை செய்தார்.மங்கலமேடு போலீசார், நடராஜனை கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், தீர்ப்பளித்தார்.அதில், நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனால், மங்கலமேடு போலீசார், நடராஜனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!