தாய் உடலை வீட்டுக்குள் புதைத்துஅருகிலேயே அமர்ந்திருந்த மகன்
மயிலாடுதுறை:சீர்காழி அருகே இறந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் வீட்டுக்குள்ளேயே புதைத்து அருகிலேயே அமர்ந்திருந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் மேல தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம் மனைவி இந்திராணி 65. கணவர் இறந்த நிலையில் இந்திராணி மகன் பிரபாகரன் 35 என்பவருடன் வசித்து வந்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரபாகரனுக்கு மனநலம் பாதித்தது. அவர் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணியை நேற்று முன்தினம் முதல் காணவில்லை.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அறையில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு இருந்தது. அதன் அருகில் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தோண்டிப் பார்த்தபோது இந்திராணி சடலம் இருந்தது.வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த இந்திராணியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இறந்த நிலையில் பிரபாகரன் வீட்டிற்குள்ளேயே பள்ளம் தோண்டி தாயின் உடலை புதைத்து அருகிலேயே அமர்ந்து இருந்தது தெரிந்தது.புதுப்பட்டினம் போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!