மதுரை இயக்குனரின்குறும்படத்திற்கு விருது
மதுரை:மதுரை குறும்பட இயக்குனரின் மிஸ்டர் காப்ளர் படத்திற்கு, பல நாடுகள் பங்கேற்கும் திரைப்பட விழாவில் விருது அறிவிக்கப்பட்டது.
மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த சதீஷ் குருவப்பன், 40; இவர், 17 குறும்படங்களை இயக்கியுள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மனிதருக்குரிய மரியாதையை தர வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, 2017ல் இவர் இயக்கிய 'மிஸ்டர் காப்ளர்' படத்தை, இதுவரை உலக அளவில், 20 கோடி பேர் பார்த்துள்ளனர்; 70 லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.
இதை பாராட்டி, ஏற்கனவே சாம்பியன்ஸ் ஆப் தி யுனிவர்சல், அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிலையில், அமெரிக்காவில் எல்.டி.யு.இ., அமைப்பு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'மிஸ்டர் காப்ளர்' படத்தை சிறந்த சாதனை படமாக தேர்வு செய்து விருது அறிவிக்கப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!