ரூ.2 கோடி ஹவாலா பணம்மண்ணடியில் சிக்கியது
மண்ணடி:வாகன சோதனையில் பிடிபட்ட 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மண்ணடி பகுதியில் துறைமுகம் காவல் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். காரில் வந்த இருவரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டதில் கட்டு கட்டுக்காக 2 கோடி ரூபாய் சிக்கியது.

இது குறித்து விசாரித்த போது வியாபாரம் செய்ய பணம் எடுத்து வந்ததாக கூறினர்.பிடிபட்ட நபர்கள் ஆந்திர மாநிலம் ஒங்கோலைச் சேர்ந்த ஜெய்சங்கர் 45 நாராயணன் 35 என்பதும் 2 கோடி ரூபாய் பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!