துாய்மை பணியாளர் சம்பள வழக்குஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை:துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கக் கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கன்னியாகுமரி, தேரூர் புருஷோ கிங்ஸ்லி சாலமன் தாஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:கன்னியாகுமரி மாவட்டத்தில், 51 பேரூராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர்.
இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப கலெக்டரால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அதை விட குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.சீருடை, கையுறை, பாதுகாப்பு சாதனங்களுக்குரிய செலவினங்களுக்கு, தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒப்பந்ததாரர்கள் பிடித்தம் செய்து கொள்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். சீருடை, கையுறை, பாதுகாப்பு சாதனங்கள், இ.எஸ்.ஐ.,க்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது.
மதுரை தொழிலாளர்துறை இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆஜராகி தெரிவித்ததாவது: குறைந்தபட்ச சம்பளத்தில் சில பிடித்தங்கள் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், வேலை அளிப்பவர் செலுத்த வேண்டிய பி.எப்., - இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகைக்காக, தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்வது ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதை கேட்ட நீதிபதிகள், 'தமிழக அரசு தரப்பில் ஜூலை 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!