கிருஷ்ணகிரியில் இந்திய மாங்கனி கண்காட்சி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்கியது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
கண்காட்சி விழா குழு தலைவரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி கண்காட்சியை துவக்கி வைத்தார்.அரங்கில் வைத்திருந்த அனைத்து வகை மா ரகங்களையும், அரசுத்துறை சார்பில் வைத்திருந்த, 50 அரங்குகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு துறை சார்பில், 62 பேருக்கு, 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார்.
கண்காட்சி அரங்குகளில் காய்கறி, பழங்களால் வடிவமைத்த புலி, வாத்து, மீன், தலைவர்களின் உருவங்கள், மலர்களால் அமைக்கப்பட்ட கே.ஆர்.பி., அணை உள்ளிட்டவை மக்களை வெகுவாக கவர்ந்தன.தொடர்ந்து, 25 நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 80 கடைகள், தின்பண்ட கடைகள், கேளிக்கை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன், கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், வேளாண் கருத்தரங்குகள் நடக்கின்றன.கொரோனா தாக்கத்தால், இரு ஆண்டுகளாக, மாங்கனி கண்காட்சி நடக்காத நிலையில் தற்போது துவங்கிய மாங்கனி கண்காட்சியால், கிருஷ்ணகிரி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!