பைக்குகள் மோதல்: 3 பேர் பலி
புதுக்கோட்டை:விராலிமலை அருகே, இரண்டு பைக்குகள் மோதியதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, மாதிரிப்பட்டியைச் சேர்ந்த கவுதம், 25, பிரவீன்குமார், 24, சூரியபிரகாஷ், 24, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, கொடும்பாளூர் - - புதுக்கோட்டை சாலையில், ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.கொடும்பாளூர், சவுக்கு காட்டைச் சேர்ந்த ரெங்கசாமி, 48, வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், 25, ஆகிய இருவரும் எதிரே இன்னொரு பைக்கில் வந்துள்ளனர்.
விராலிமலை அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்கு களும் மோதின. இதில், படுகாயமடைந்த கவுதம், ரெங்கசாமி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பிரவீன்குமார், சூரியபிரகாஷ் ஆகியோரை, அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!