போதைக்கு இருமல் டானிக்?மெடிக்கலில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்:இருமலுக்கு பரிந்துரைக்கப்படும், 'டானிக்'கை, சிலர் போதைப்பொருள் போல பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பூரில் உள்ள மருந்துக் கடைகளில் அதிகாரிகள்திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக்கை, சிலர் போதைக்காக பயன்படுத்துவதாகவும், அத்தகைய இருமல் மருந்துகள் அதிக அளவில் விற்பனையாவதாகவும் அரசுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, திருப்பூரில் பல இடங்களில் மருந்துக் கடைகளில், தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட மருந்துகள் கள ஆய்வாளர்கள் ராமசாமி, மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ''இருமலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருந்து, கடைகளில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளனர்; 'பில்'களை பராமரிக்கின்றனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ''யாராவது மீண்டும் மீண்டும் அதே மருந்தை கேட்டு வந்தாலோ, கூடுதலாக வாங்க முனைந்தாலோ தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுஉள்ளது,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!