ரவுடியை கொன்று ஆற்றில் வீசியமூவர் பாபநாசம் கோர்ட்டில் சரண்
தஞ்சாவூர்:தஞ்சையில் ரவுடியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள், கொலை செய்து, அவரது உடலை ஆற்றில் வீசி சென்றுஉள்ளனர்.
தஞ்சாவூர், கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மனோகரன், 30, மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் சிலர் மனோகரனை, 'டூ - வீலரில்' கடத்திச் சென்றுள்ளனர்.இது குறித்து, மனோகரனின் தாய் வாசுகி அளித்த புகார்படி, தஞ்சை மேற்கு போலீசார், மனோகரனை தேடி வந்தனர்.
இந்நிலையில், கத்திக்குத்து காயங்களுடன், கல்லணைக் கால்வாயில் அவர் இறந்து கிடந்தார். ஏற்கனவே, சேவப்ப நாயக்கன்வாரியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக, மனோகரன் மீது வழக்கு உள்ளது.இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், மனோகரனை கொலை செய்து, ஆற்றில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34, கிரண், 26, கண்ணன், 24,ஆகியோர், பாபநாசம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மணிகண்டனின் நண்பன் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துஉள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!