வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற புதிய விதிமுறைகள்

பாதிப்பு
கடந்த ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும்.

மருத்துவ செலவு
வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
வாசகர் கருத்து (5)
வரவேற்க வேண்டும்
வாடகை தாய் என்பதே நம் கலாச்சாரப்படி...
குழந்தை இல்லா தம்பதியர் வாடகை தாயின் மூலம் குழந்தை பெறலாம். இது தல்ல திட்டம். கரு முட்டை இல்லாத தம்பதியரில் கணவனது கருமுட்டை தான் வாடகை தாயின் கருப்பையில் வைக்கப்படுமா அல்லது அதற்கு பொறுப்பேற்கும் டாக்டர் மூலம் வெளி நபரின் கருமுட்டை தான் கருப்பையில் கெலுத்தப்படுமா என்ற விவரம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் விதி முறைகளில் உள்ளதா.
கணவர்( ஆணாக இருக்கும் பட்சத்தில்😉) களுக்கு கருமுட்டை உருவாக வாய்ப்பேயில்லை. விந்துதான் உருவாகும்.
செயற்கைக் கருவூட்டல் வேண்டாம். ஏராளமான ஏழைக் குழந்தைகள் உள்ளன. அவற்றை தத்தெடுப்பதே🙏 மேல். எனக்குத் தெரிந்து டெஸ்ட்ட்யூப் குழந்தை பெற்றவர்கள் பிற்காலத்தில் பல உடல்நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர். யாருடைய கருமுட்டையையோ பெற்று அல்லது வாடகைத் தாய் மூலம் பெறுவது🤔 உகந்ததல்ல.