Load Image
dinamalar telegram
Advertisement

ஊட்டியில் புலிகள் நடமாட்டம் கேமரா பொருத்தி கண்காணிப்பு

ஊட்டி:ஊட்டி அருகே ரோஸ் மவுன்ட், மார்லிமந்து பகுதிகளில் புலிகள் நடமாடுவதால், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, மார்லிமந்து அணையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. அணைப் பகுதியில், ஐந்து செந்நாய்களை புலி துரத்தி செல்லும், 'வீடியோ' வேகமாக பரவியது.
இந்நிலையில், நேற்று ரோஸ் மவுன்ட் பகுதியில், இரண்டு பசு மாடுகளை மர்ம விலங்கு தாக்கியது. ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வனச்சரகர் ரமேஷ் கூறுகையில், ''செந்நாய்களை புலி துரத்திய இடம், பசுமாடுகளை வனவிலங்கு தாக்கிய இடம் ஆகியவற்றில் கேமரா வைத்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement