Load Image
dinamalar telegram
Advertisement

ரூ.5 கோடி கோவில் நிலம்மீட்பு

திருப்பூர்:உடுமலை அருகே ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32.87 ஏக்கர் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆண்டியகவுண்டனுாரில், ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 32.87 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது.நிலத்தை, 20 ஆண்டுகளாக, 10 பேர் ஆக்கிரமித்திருந்தனர். பிப்ரவரியில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற, அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய்த் துறையினர், போலீசார், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, கோவில் நிலத்தை நேற்று மீட்டனர்.நிலம் கோவில் சுவாதீனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் நிலம் என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நிலத்தின் மொத்த சந்தை மதிப்பு, 5 கோடி ரூபாய்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement