Load Image
dinamalar telegram
Advertisement

கோவை ஆவின் ஊழல்3 அலுவலர் சஸ்பெண்ட்

கோவை:கோவை, 'ஆவின்' நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, அலுவலர்கள் மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்
.கோவை, பச்சாபாளையம் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், மே 30ல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முதுநிலை தொழிலக உதவியாளர் பதவியில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து, 8.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த தொகை, தற்காலிக பணியாளர்களாக இருந்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட, 11 பேரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட லஞ்சப்பணம் என விசாரணையில் தெரியவந்தது.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் இருந்து லஞ்சப்பணம் காசோலைகளாகவும், வங்கி கணக்கிற்கு நேரடியாகவும் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிந்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து, கோவை ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவை ஆவின் அலுவலகத்தில் கடந்த டிசம்பரில் ஆவின் விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பு குறைவானது கண்டுபிடிக்கப்பட்டது.உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித் குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணம் வாங்காமல் விற்பனை செய்தது தெரிந்தது.இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கோவை ஆவின் நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement