ADVERTISEMENT
பொன்னேரி:நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, காளத்தீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.50 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, சைனாவரம் கிராமத்தில், தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள, காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 14.50 ஏக்கர் நிலங்களை மீட்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதை தொடர்ந்து, நேற்று, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் உதவி ஆணையர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால அவகாசம்
கோவில் இடங்களில் இருந்த, வீடுகளை இடிக்க முயன்றபோது, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பெண்கள் இருவர் தீக்குளிக்க முயன்று, போலீசார் அவர்களை தடுத்து, அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேன்களை பறித்து சென்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருவதாகவும், திடீரென வீடுகள் இடிக்கப் பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் என, குடியிருப்புவாசிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அங்கு வந்த பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், சோழவரம் ஒன்றிய சேர்மன் ராசாத்தி, ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி ஆகியோரிடம் முறையிட்டனர்.அதை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசி, கால அவகாசம் பெற்று கொடுத்தனர். இதனால் வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அனுமதி
கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு கடைகள் இடிக்கப்பட்டன. 12 கடைகள் பூட்டி 'சீல்'வைக்கப்பட்டன. முன்னதாக கடை உரிமையாளர்களுக்கு, உடைமைகளை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.உரிமையாளர்கள் கடையில் இருந்து பொருட்களை அவசர அவசரமாக வெளியே எடுத்து வைத்தனர். விவசாய நிலங்கள் மீட்கப்பட்டு, கோவில் நிலம் என்பதற்காக பதாகைகள் வைக்கப்பட்டன.மேற்கண்ட கோவிலுக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.50 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்து உள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!