Load Image
dinamalar telegram
Advertisement

பன்னீர் ரோஜா மாலை கடுப்பான பழனிசாமி

Tamil News
ADVERTISEMENT
பேச வந்த நேரத்தில் பன்னீர் ரோஜா மாலை போட்டதால், எரிச்சலான பழனிசாமி, முன்னாள் அமைச்சரை மேடையிலேயே கடிந்து கொண்டார்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வந்தார். அவருக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல இடங்களில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் ஏற்பாட்டில், பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவைத் தலைவர் தேர்வு தொடர்பான தீர்மானத்தை வரவேற்க, பழனிசாமி மேடையில் பேச துவங்கினார்.
அப்போது, பெஞ்சமின் மற்றும் ஆதரவாளர்கள், பெரிய பன்னீர் ரோஜா மாலையை, பழனிசாமி கழுத்தில் போடச் சென்றனர். உயர் நீதிமன்ற தடையால், பொதுச்செயலர் பதவி ஏற்க முடியாத நிலையில், மாலை போட வந்த பெஞ்சமினை மேடையிலேயே பழனிசாமி கடிந்து கொண்டார்.

போக்குவரத்து நெரிசல்
பொதுக்குழு கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு முதல் திருவேற்காடு வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வானகரத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
சென்னை பைபாஸ் சாலையில், காலை 8:00 மணி முதல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருமண மண்டபம் அமைந்துள்ள வானகரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மருத்துவமனை, பள்ளிகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலால், பொதுக்குழு கூட்டம் துவங்குவதும் தாமதம் ஆனது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா

    These Kazangal only to disturb Tamilians and their way of life, they never done nor going to do any benefit for Tamilians.

  • Rajesh - Ontario,கனடா

    .....

Advertisement