Load Image
dinamalar telegram
Advertisement

முன்கூட்டியே நெல் கொள்முதல் ஊக்கத்தொகை அறிவிக்காத அரசு

சென்னை:நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை விரைந்து அறிவிக்குமாறு, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. 100 கிலோ எடை உடைய குவிண்டால் நெல்லுக்கு, மத்திய - மாநில அரசு கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன.
நடப்பு சீசனில், மத்திய அரசு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,940 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 1,960 ரூபாயும் வழங்குகிறது. அதனுடன் சேர்த்து, தமிழக அரசு சாதாரண நெல்லுக்கு, 75 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 100 ரூபாயும் ஊக்கத் தொகை வழங்குகிறது. இதுவரை, 350 கோடி கிலோவுக்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் நெல் மூட்டைகளை முறையாக பாதுகாக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஏராளமான மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின.மத்திய அரசு வரும், 2022 - 23 சீசனில் குவிண்டால் சாதாரண, உயர் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை தலா, 100 ரூபாய் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் நெல் கொள்முதலை, அக்., 1ம் தேதிக்கு பதில் செப்., 1ல் துவக்கக் கோரி, முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார்.ஆனால், அதற்கு ஏற்ப நெல் கொள்முதலுக்கு, தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:தமிழக அரசு சீசன் துவங்கும் சில தினங்களுக்கு முன், ஊக்கத் தொகையை அறிவிக்கிறது. வரும் சீசனில் ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்ப தமிழக அரசு, ஊக்கத் தொகையை விரைந்து அறிவிக்க வேண்டும். அப்போது தான் குறைவாக இருந்தால் உயர்த்தி வழங்க வலியுறுத்த முடியும். வியாபாரிகளிடம் நெல் வழங்குவதற்கு பதிலாக, அரசிடம் வழங்க காத்திருப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement