வேன் மோதியதில் இளைஞர் பலி
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த, அய்யனார் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞர், வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுராந்தகம் அடுத்த, மலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 21; மதுராந்தகம் பகுதியில் இரும்பு பீரோ செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது 'மகேந்திரா டூரிஸ்ட்' வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!