கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மாமல்லபுரம்:கல்பாக்கம் பண்டக சாலை ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்பாக்கத்தில், அணுசக்தி ஊழியர்கள் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை இயங்குகிறது. இந்நிர்வாகம், நுகர் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.இங்கு பணிபுரிவோரில் 50 சதவீதம் பேர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் சி.ஐ.டி.யு., சங்கங்கள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பணி நிரந்தரம், ஏழாவது ஊதியக்குழு சம்பளம், 68 சதவீத அகவிலைப் படி நிலுவை, சிறப்பு தேர்வு நிலைகள் ஊதிய உயர்வு, பதவிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர். இன்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!