தனித்துவமான வைர வளையல்சென்னை கீர்த்திலால்ஸ் அறிமுகம்
சென்னை :நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பத்துடன் கூடிய, தனித்துவமான வைர வளையல்களை, சென்னை 'கீர்த்திலால்ஸ் ஜுவல்லரி' அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நடிகை ரம்யா பாண்டியன் அறிமுகப்படுத்தினார்.சென்னை, 'கீர்த்திலால்ஸ்' ஜுவல்லரி வைர நகை நிறுவனம் தனித்துவமான தொழில்நுட்பத்துடன் கூடிய, 'குளோஸ் செட்டிங் வைர வளையல் 'பரிதி' கலெக் ஷனை அறிமுகப்படுத்தியது.இதை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஷோரூமில் நடிகை ரம்யா பாண்டியன் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில், விருதுகளை வென்ற ஆபரணங்களின் 'மினியேச்சர்' எனும் சிறிய வடிவமைப்புகளான 'இன்பினிட்டி' கலெக் ஷன் ஆபரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.இது குறித்து நிறுவன இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் பேசியதாவது:எங்களது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் விருப்பத்திற்கேற்ப புதுமையான 'ஸ்டைல்' ஆபரணங்களை தொடர்ந்து வழங்க விரும்புகிறோம்.நாட்டில் முதல் முறையாக நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பத்தோடு 'பரிதி' கலெக் ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான 'குளோஸ் செட்டிங்' வளையல்களின் தொகுப்பாக திகழ்கிறது. இவ்வகையாக வளையல்கள் அனைத்து தலைமுறை பெண்களுக்கும், காலத்தை கடந்து நிலைத்து நிற்கக்கூடிய வகையில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!