Load Image
dinamalar telegram
Advertisement

 தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றம்

Tamil News
ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதனுார் கிராமத்தில், மிகவும் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுார் கிராமம், கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியில், மின் கம்பங்களுக்கு இடையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கின.
தொங்கும் மின்கம்பிகளால், எந்த நேரமும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், மின் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், தொடர் மின்வெட்டுக்கு காரணமாக இருப்பதாலும், தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, புதிய மின் கம்பங்களை மாற்றி, தாழ்வாக சென்ற மின் கம்பிகளை உயரமாக சரி செய்து, சீரான மின் வினியோகம் செய்வதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement