Load Image
dinamalar telegram
Advertisement

மாநில ஜூனியர் கூடைப்பந்து போட்டிசென்னை அணி காலிறுதிக்கு முன்னேற்றம்


சென்னை, மாநில அளவில் ஜூனியர் பிரிவு சிறுமியருக்கான கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மாநில அளவில் ஜூனியர் பிரிவு சிறுமியருக்கான கூடைப்பந்து போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், துாத்துக்குடி, திருவாரூர் என, மொத்தம் 40 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' முறையிலும், தொடர்ந்து 'நாக் - அவுட்' முறையிலும் நடக்கின்றன.நேற்று காலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சேலம் அணி, 67 - 51 என்ற புள்ளி கணக்கில் மயிலாடு துறையையும், திண்டுக்கல் அணி, 79 - 69 என்ற புள்ளிக்கணக்கில் செங்கல்பட்டு அணியையும், துாத்துக்குடி அணி, 70 - 52 என்ற புள்ளிக்கணக்கில் சிவகங்கை அணியையும் வீழ்த்தி, காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.அதேபோல், தஞ்சாவூர் அணி, 35 - 16 என்ற புள்ளிக்கணக்கில் பெரம்பலுார் அணியையும், 'சென்னை - ஏ' அணி 49 - 32 என்ற புள்ளிக்கணக்கில் விருதுநகர் அணியையும் தோற்கடித்தன.மேலும், நாமக்கல் அணி, 34 - 25 புள்ளியில் கன்னியாகுமரியையும், கோவை, 59 - 14 புள்ளியில் கிருஷ்ணகிரி அணியையும், ஈரோடு 49 - 42 புள்ளியில் திருவாரூர் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகள் காலிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று, தொடர்ந்து விளையாடி வருகின்றன.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement